ADDED : மே 28, 2010 01:35 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.
முன்னதாக கிராம மக்கள் நடத்திய ஊரணி பொங்கலை தொடர்ந்து, நல்லாம்பாளையம் கிராமத்தின் நான்கு ராஜவீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. பெரிய தேரில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தண்டபாணி மேற்பார்வையில் நடந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.